வேற வழி ..... 3வது கருத்து எனக்கும் பிடிக்கவில்லை அதுவும் இறுதி ஆரோக்யமான ஜனநாயகம் இல்லை......
நடந்தாய் வாழி...
Cauvery ain't just a river in India.
Friday, May 30, 2014
370... தேவைதானா
வேற வழி ..... 3வது கருத்து எனக்கும் பிடிக்கவில்லை அதுவும் இறுதி ஆரோக்யமான ஜனநாயகம் இல்லை......
Monday, January 4, 2010
தமிழ் தட்டச்சு உதவி
எனக்கு தயவு செய்து யாராவது வழி காட்டினால் நன்றாக இருக்கும்
Saturday, December 12, 2009
இன்று போய் நாளை வா
இன்னும் கடவுள் சிவ பெருமானை நினைக்கும் போது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உருவமே வருகிறது. நேற்று சம்பூர்ண ராமாயணம் படத்தில் (கமலின் படம் அல்ல.. இது என் டி ராமராவ் படம்) ராமன் தம்பி பரதனாக வருவார் ஆனால் அவருக்கு அந்த charater சரிவரவில்லை... மெகா சீரியலில் வரும் அழு மூஞ்சி கஞ்சியாகஉள்ளது .. பேசாமல் ராவணனாக நடித்திருந்தால் பேஷாக இருந்திருக்கும்... வீணை இசையை சிதம்பரம் ஜெயராமனுக்கு பதிலாக சிவாஜி பாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்...
சரி என்ன விஷயம் எனில்.... இன்று அதிகாலை எனக்கு ஒரு பயங்கர கனவு... சாரு நிவேதிதா ராவணனாகவும், ஜெயமோகன் தலைமை அமைச்சர் மகோதகன் ஆகவும் இசைஞானி இளையராஜா வீணை கொடியுடைய வேந்தன் என பாடிக்கொண்டு இருக்கிறார் ராவண சபையில்.. இங்கு நான் பதிவது இலக்கிய pulp அல்லது pipmஒ இல்லை.. சரி இது ராமாயணம் ஆயிற்றா, ராமன் எங்கே என பார்த்தால், அவர் வாணர (திராவிட கழகத்தினர் மன்னிப்பாராக) சேனையுடன் வருகிறார் அதற்குள் தூக்கம் களைந்து விடுகிறது...
அடுத்த கனவில் ராமனாக ஜெயமோகன் ராவணனாக சாரு: இராவணன் புத்தக வெளியீடு விழாவில் பிசியாக இருக்க ராமன் அம்பு எய்த அன்றைய போர் முடிகிறது.. இராவணன் சொல்கிறான் " இன்று போய் நாளை வா " (தலைகீழ் ராமாயணம்)
இந்த அதி பயங்கர கனவுக்கு யாரும் பின்னூட்டம் இட்டு விளக்கலாம், தக்க சன்மானம் வழங்கப்படும்...
(பின்குறிப்பு: நாங்கெல்லாம் விடிய விடிய ராமயணம் கேட்போம்ல)....
Thursday, December 10, 2009
Sunday, May 24, 2009
ருசியா Vs அமெரிக்கா இலங்கை Vs இந்தியா
இலங்கை இன படு கொலை ஏன் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை வெகு சனங்களின் மீது காண முடியவில்லை? வெகு சனங்களில் நானும் ஒருவனாக ஒரு பதிவு...
communisim நீர்த்து போக செய்ய மற்றநாடுகளுக்கு பரவாமல் இருக்க அமெரிக்கா செய்த உக்தி ருசியாவை உடைக்க செய்தது... (ரஷ்ய தனக்கு தானையும் சில தவறுகள் செய்தது)
வெகுசனத்திடம் communisim பற்றி கேள்வி எழுப்புங்கள் .. அவர்களின் மறு கேள்வி ருச்சியா இருகிறதா? ரஷ்யாவின் நிலைமை என்ன? (தொழிலாளர்களை சுரண்டும் போது Karl Marx மறுபடியும் படிகப்படுவார் என்பது வேறு...) ...... இது அமெரிக்கா வெற்றி..
ராஜீவ் கொலைக்கு முன்:
இலங்கையை தன் கட்டுக்குள் வைத்திருக்க அமெரிக்கா தலிபானை வளர்த்ததை போல் விடுதலை புலிகளை இந்தியா வளர்த்தது... மற்ற நாடுகள் குறுக்கிடமால் இருக்க ஜெயவர்த்தனா ஒப்பந்தம் மூலம் 1800 இந்திய வீரர்களை பலிவாங்கி ஆயிரகணக்கான பலாத்காரம், கொலைகளை செய்து திரும்பியது... முடிவு உணர்ச்சிவசப்பட்ட விடுதலை புலிகளின் ராஜீவ் கொலை..
ராஜீவ் கொலைக்கு பின்..
இந்திய உதவி இல்லாமல் மிக வேகமாக வளரும் புலிகளால் இந்தியாவிற்கு அதிர்ச்சி. தனி ஈழம் அமைந்தால் இந்தியாவுக்கு ஆபத்து... அண்ணாவின் தனி தமிழ் நாடு கொள்கைகள் திரும்ப வரலாம்...
தமிழகத்தில் தமிழர்களின் உணர்வு மழுங்கடிக்க அடக்குமுறை அவசியம்.. அதற்கு பாசாங்கு உள்ள இந்திய ஜனநாயகம் இடம் அளிக்கா.. இங்குதான் அமெரிக்காவும் இந்தியாவும் ஒரே கோட்டில் அயலுறவு கொள்கையில் இணைக்கிறது. நேரடியாகவும் மறைமுகமாகவும் இலங்கைக்கு உதவிகள்... முடிவு இந்த இன படுகொலையுடன் நடந்து முடியபோகிறது...
வெகு சனங்களின் மனநிலை:
- சரியான தலைமை இல்லாமை.. (அ) தலைமைகளின் சந்தர்பவாதம்
- ஊடகங்கள் சரியாக எடுத்து செல்லாதது
- படிததவர்கள் போராட்டத்தில் இறங்குவதில்லை.. பாமரர்கள் இலவச தொலைக்காட்சியின் அருகில் குத்தாட்டங்களில் மயங்கி இருப்பது..
போன்ற சராசரி காரணங்கள்....
நான் இன படுகொலையை ஆதரிக்கவில்லை.. இது இரண்டாம் உலக போருக்கு பின் நடந்த மிக பெரிய படு கொலை.
இந்த உணர்ச்சிவசப்பட்ட இந்த கட்டுரை too late...
உங்களை போல் அனுபவம் உள்ள அறிவுஜீவிகளிடம் நாங்கள் எதிர்பார்ப்பது : இனி என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கான விடை..
Friday, May 22, 2009
உழவுக்கு முதலில் வந்தனை...
Wednesday, May 20, 2009
டார்வினும் பரிணாமமும்...
அறிவியலாளர்கள் இத்தனை விடுபட்ட தொடர்பு (missing Link) என அழைக்கிறார்கள்.. அதாவது மனிதனுக்கும் பாலூட்டி விலங்குகளுக்கும் உள்ள தொடர்புக்கு விடை காண நல்ல ஆதாரமே இந்த படிமம்...
டார்வின் கொள்கைகள் (அவரது orgin of the Species என்ற புத்தகத்திலிருந்து) பலரால் மறுக்கப்பட்டு (முக்கியமாக மத அடிப்படை வாதிகள்) பலரால் ஏற்றுக்கொள்ளபட்டு, உறுதியான எல்லோராலும் (மதவாதிகளை தவிர) ஏற்றுக்கொள்ளபடும் தத்துவமாக இன்னும் மாறவில்லை...
ஏன் டார்வின் கொள்கைகளுக்கு முக்கியத்துவம்?
- DNA பற்றிய சிக்கலான கேள்விகளுக்கு விடை காண...
- எப்படி உயிர்கள் தோன்றின..
- உரங்கள் இல்லாமல் பயிரிட...
இப்படி பல இத்யாதிகள் (சுஜாதா உயரோடு இருந்தால் ஒரு பெரிய கட்டுரையை எழுதி இருப்பார்)...