Pages

Friday, May 22, 2009

உழவுக்கு முதலில் வந்தனை...


"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்" - பாரதியார்

இந்தியாவில் உழவு வேறு தொழில் வேறு, ஆனால் அமெரிக்காவில் எல்லாமே தொழில்கள்...
இந்தியாவில் agriculture (உழவு ஒரு கலாச்சார வாழ்வாதார முறை) அமெரிக்காவிலோ Agro Industry (விவசாயம் ஒரு தொழில்). 1950 களில் ரஷ்யவிலுருந்து கடன் வாங்கிய ஐந்தாண்டு திட்டங்களை போல் நேருவால் கூட்டு பண்ணைகளை அமைக்க முடியவில்லை ஆதலால் உழவு ஒரு கலாச்சார, சுயமரியாதை சின்னமாக விளங்கியது. இன்று ருசியா போய் அமெரிக்கா...
1970 இல் வந்த பஞ்சத்தினால் விவசாய புரட்சி - ரசாயன உரங்கள், பூச்சி கொல்லி மருந்துகள், கலப்பின விதைகள் இல்லாமல் நம்மால் இன்று விவசாயம் செய்ய முடியாது (சில விலக்குகள்) மரபணு மாற்றபெற்ற (Genetically Modified) உணவுகளை நாம் உண்ணுகிறோம்... அதாவது விஷத்தை உண்ணுகிறோம்... கலப்பின விதைகளின் அரசன் / அரக்கன் எல்லாமே இந்த நவீன GM முறை தான்.
GM பற்றிய ஒரு விழிபுணர்வு நம்மிடம் இல்லை... மேலை நாடுகள் நம்மை ஒரு பரிசோதனை கூடமாக மற்றயுள்ளன, இதை பற்றி நம் அரசியல்வாதிகளுக்கு பிரச்சினை இல்லை (சில கோடிகள் பிச்சைபோட்டால் போதும்)
சிலந்தி, வெட்டுகிளி, பாம்பு, தவளை மற்றும் இன்னும் பிற உயிரினங்களிளுருந்து எடுக்க பட்ட மரபணுக்களை நெல் கோதுமை விதைகளில் செலுத்தி இந்தியாவில் பரிசோதிக்கபடுகிறது. அமெரிக்கா மற்றும் ஈரோப்பிய நாடுகளில் GM உணவுகளின் மீது மரபணு மற்றம் செய்யப்பட்ட என்கின்றன வரிகள் இருக்கும் ஆனால் இங்கு?????????

No comments:

Post a Comment