Pages

Saturday, December 12, 2009

இன்று போய் நாளை வா




சிவாஜி கணேசன் பற்றி நிறைய எழுதி நிறைய படித்து நமக்கு அலுத்து போய்விட்டது.

இன்னும் கடவுள் சிவ பெருமானை நினைக்கும் போது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உருவமே வருகிறது. நேற்று சம்பூர்ண ராமாயணம் படத்தில் (கமலின் படம் அல்ல.. இது என் டி ராமராவ் படம்) ராமன் தம்பி பரதனாக வருவார் ஆனால் அவருக்கு அந்த charater சரிவரவில்லை... மெகா சீரியலில் வரும் அழு மூஞ்சி கஞ்சியாகஉள்ளது .. பேசாமல் ராவணனாக நடித்திருந்தால் பேஷாக இருந்திருக்கும்... வீணை இசையை சிதம்பரம் ஜெயராமனுக்கு பதிலாக சிவாஜி பாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்...



சரி என்ன விஷயம் எனில்.... இன்று அதிகாலை எனக்கு ஒரு பயங்கர கனவு... சாரு நிவேதிதா ராவணனாகவும், ஜெயமோகன் தலைமை அமைச்சர் மகோதகன் ஆகவும் இசைஞானி இளையராஜா வீணை கொடியுடைய வேந்தன் என பாடிக்கொண்டு இருக்கிறார் ராவண சபையில்.. இங்கு நான் பதிவது இலக்கிய pulp அல்லது pipmஒ இல்லை.. சரி இது ராமாயணம் ஆயிற்றா, ராமன் எங்கே என பார்த்தால், அவர் வாணர (திராவிட கழகத்தினர் மன்னிப்பாராக) சேனையுடன் வருகிறார் அதற்குள் தூக்கம் களைந்து விடுகிறது...


அடுத்த கனவில் ராமனாக ஜெயமோகன் ராவணனாக சாரு: இராவணன் புத்தக வெளியீடு விழாவில் பிசியாக இருக்க ராமன் அம்பு எய்த அன்றைய போர் முடிகிறது.. இராவணன் சொல்கிறான் " இன்று போய் நாளை வா " (தலைகீழ் ராமாயணம்)


இந்த அதி பயங்கர கனவுக்கு யாரும் பின்னூட்டம் இட்டு விளக்கலாம், தக்க சன்மானம் வழங்கப்படும்...


(பின்குறிப்பு: நாங்கெல்லாம் விடிய விடிய ராமயணம் கேட்போம்ல)....






Sunday, May 24, 2009

ருசியா Vs அமெரிக்கா இலங்கை Vs இந்தியா


உணர்ச்சிவசப்பட்ட திரு. நாகர்ஜுனன் கட்டுரைக்கு ஒரு எதிர்வினை..

இலங்கை இன படு கொலை ஏன் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை வெகு சனங்களின் மீது காண முடியவில்லை? வெகு சனங்களில் நானும் ஒருவனாக ஒரு பதிவு...

communisim நீர்த்து போக செய்ய மற்றநாடுகளுக்கு பரவாமல் இருக்க அமெரிக்கா செய்த உக்தி ருசியாவை உடைக்க செய்தது... (ரஷ்ய தனக்கு தானையும் சில தவறுகள் செய்தது)

வெகுசனத்திடம் communisim பற்றி கேள்வி எழுப்புங்கள் .. அவர்களின் மறு கேள்வி ருச்சியா இருகிறதா? ரஷ்யாவின் நிலைமை என்ன? (தொழிலாளர்களை சுரண்டும் போது Karl Marx மறுபடியும் படிகப்படுவார் என்பது வேறு...) ...... இது அமெரிக்கா வெற்றி..

ராஜீவ் கொலைக்கு முன்:

இலங்கையை தன் கட்டுக்குள் வைத்திருக்க அமெரிக்கா தலிபானை வளர்த்ததை போல் விடுதலை புலிகளை இந்தியா வளர்த்தது... மற்ற நாடுகள் குறுக்கிடமால் இருக்க ஜெயவர்த்தனா ஒப்பந்தம் மூலம் 1800 இந்திய வீரர்களை பலிவாங்கி ஆயிரகணக்கான பலாத்காரம், கொலைகளை செய்து திரும்பியது... முடிவு உணர்ச்சிவசப்பட்ட விடுதலை புலிகளின் ராஜீவ் கொலை..
ராஜீவ் கொலைக்கு பின்..
இந்திய உதவி இல்லாமல் மிக வேகமாக வளரும் புலிகளால் இந்தியாவிற்கு அதிர்ச்சி. தனி ஈழம் அமைந்தால் இந்தியாவுக்கு ஆபத்து... அண்ணாவின் தனி தமிழ் நாடு கொள்கைகள் திரும்ப வரலாம்...
தமிழகத்தில் தமிழர்களின் உணர்வு மழுங்கடிக்க அடக்குமுறை அவசியம்.. அதற்கு பாசாங்கு உள்ள இந்திய ஜனநாயகம் இடம் அளிக்கா.. இங்குதான் அமெரிக்காவும் இந்தியாவும் ஒரே கோட்டில் அயலுறவு கொள்கையில் இணைக்கிறது. நேரடியாகவும் மறைமுகமாகவும் இலங்கைக்கு உதவிகள்... முடிவு இந்த இன படுகொலையுடன் நடந்து முடியபோகிறது...

வெகு சனங்களின் மனநிலை:

  • சரியான தலைமை இல்லாமை.. (அ) தலைமைகளின் சந்தர்பவாதம்
  • ஊடகங்கள் சரியாக எடுத்து செல்லாதது
  • படிததவர்கள் போராட்டத்தில் இறங்குவதில்லை.. பாமரர்கள் இலவச தொலைக்காட்சியின் அருகில் குத்தாட்டங்களில் மயங்கி இருப்பது..

போன்ற சராசரி காரணங்கள்....

நான் இன படுகொலையை ஆதரிக்கவில்லை.. இது இரண்டாம் உலக போருக்கு பின் நடந்த மிக பெரிய படு கொலை.

இந்த உணர்ச்சிவசப்பட்ட இந்த கட்டுரை too late...

உங்களை போல் அனுபவம் உள்ள அறிவுஜீவிகளிடம் நாங்கள் எதிர்பார்ப்பது : இனி என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கான விடை..

Friday, May 22, 2009

உழவுக்கு முதலில் வந்தனை...


"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்" - பாரதியார்

இந்தியாவில் உழவு வேறு தொழில் வேறு, ஆனால் அமெரிக்காவில் எல்லாமே தொழில்கள்...
இந்தியாவில் agriculture (உழவு ஒரு கலாச்சார வாழ்வாதார முறை) அமெரிக்காவிலோ Agro Industry (விவசாயம் ஒரு தொழில்). 1950 களில் ரஷ்யவிலுருந்து கடன் வாங்கிய ஐந்தாண்டு திட்டங்களை போல் நேருவால் கூட்டு பண்ணைகளை அமைக்க முடியவில்லை ஆதலால் உழவு ஒரு கலாச்சார, சுயமரியாதை சின்னமாக விளங்கியது. இன்று ருசியா போய் அமெரிக்கா...
1970 இல் வந்த பஞ்சத்தினால் விவசாய புரட்சி - ரசாயன உரங்கள், பூச்சி கொல்லி மருந்துகள், கலப்பின விதைகள் இல்லாமல் நம்மால் இன்று விவசாயம் செய்ய முடியாது (சில விலக்குகள்) மரபணு மாற்றபெற்ற (Genetically Modified) உணவுகளை நாம் உண்ணுகிறோம்... அதாவது விஷத்தை உண்ணுகிறோம்... கலப்பின விதைகளின் அரசன் / அரக்கன் எல்லாமே இந்த நவீன GM முறை தான்.
GM பற்றிய ஒரு விழிபுணர்வு நம்மிடம் இல்லை... மேலை நாடுகள் நம்மை ஒரு பரிசோதனை கூடமாக மற்றயுள்ளன, இதை பற்றி நம் அரசியல்வாதிகளுக்கு பிரச்சினை இல்லை (சில கோடிகள் பிச்சைபோட்டால் போதும்)
சிலந்தி, வெட்டுகிளி, பாம்பு, தவளை மற்றும் இன்னும் பிற உயிரினங்களிளுருந்து எடுக்க பட்ட மரபணுக்களை நெல் கோதுமை விதைகளில் செலுத்தி இந்தியாவில் பரிசோதிக்கபடுகிறது. அமெரிக்கா மற்றும் ஈரோப்பிய நாடுகளில் GM உணவுகளின் மீது மரபணு மற்றம் செய்யப்பட்ட என்கின்றன வரிகள் இருக்கும் ஆனால் இங்கு?????????

Wednesday, May 20, 2009

டார்வினும் பரிணாமமும்...

சுமார் நான்கரை கோடி வருடத்துக்கு முன்பு வாழ்ந்த ஓர் உயிரினத்தின் படிமன் (fossil) கண்டுபிடிக்கபட்டுள்ளது...


அறிவியலாளர்கள் இத்தனை விடுபட்ட தொடர்பு (missing Link) என அழைக்கிறார்கள்.. அதாவது மனிதனுக்கும் பாலூட்டி விலங்குகளுக்கும் உள்ள தொடர்புக்கு விடை காண நல்ல ஆதாரமே இந்த படிமம்...

டார்வின் கொள்கைகள் (அவரது orgin of the Species என்ற புத்தகத்திலிருந்து) பலரால் மறுக்கப்பட்டு (முக்கியமாக மத அடிப்படை வாதிகள்) பலரால் ஏற்றுக்கொள்ளபட்டு, உறுதியான எல்லோராலும் (மதவாதிகளை தவிர) ஏற்றுக்கொள்ளபடும் தத்துவமாக இன்னும் மாறவில்லை...


ஏன் டார்வின் கொள்கைகளுக்கு முக்கியத்துவம்?
  • DNA பற்றிய சிக்கலான கேள்விகளுக்கு விடை காண...
  • எப்படி உயிர்கள் தோன்றின..
  • உரங்கள் இல்லாமல் பயிரிட...

இப்படி பல இத்யாதிகள் (சுஜாதா உயரோடு இருந்தால் ஒரு பெரிய கட்டுரையை எழுதி இருப்பார்)...

Thursday, April 16, 2009

Friday, April 10, 2009

49-O


இப்பொழுது ஒட்டு போட விரும்பாதவர்கள் சும்மா மான் ஆட மயிலாட என உட்காராமல் யாருக்கும் ஒட்டு அளிக்க விரும்பவில்லை என வாக்கு சாவடியில் பதிவு செய்யலாம் . இதற்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 1961 பிரிவு 49-ஒ கீழ் யாருக்கும் ஒட்டு பதிவு செய்யவில்லை என கூறலாம்..


இதனால் என்ன பயன் எனில்....


  • உங்கள் ஒட்டு கள்ள ஓட்டாக மாறாமல் இருக்கும்...

  • இது போன்ற 49-ஒ அதிர்ச்சிகள் - அரசியல்வாதிகளை ஓரளவுக்காவது திருந்த செய்யும்...

  • சமுதாயத்தை திருத்த இது ஒரு எளிதான வழி...

பல்வேறு காரணத்தினால் உங்களால் ஒட்டு சாவடி பக்கம் போக முடியவில்லை எனில்... ஞானியின் குமுதம் ஒ பக்க கட்டுரையை படியுங்கள் (http://www.gnani.net/index.php?option=com_content&task=view&id=90&Itemid=9)


அந்த கட்டுரையில் உள்ளது போல் ஒரு தபால் அட்டையை எடுத்து 49-வாக்கு இயந்திரத்தில் சேர்க்க உச்ச நீதி மன்றத்திற்கு...


கீழ் வரும் ஆங்கில வாசகத்தை எழுதி கையெழுத்திட்டு உங்கள் பெயர் முகவரியையும் குறிப்பிட்டு அனுப்புங்கள்:we request you to expedite judgement on the case pending for several years now, seeking installation of a button for 49 oin voting machines to ensure secrecy of voting, our fundamental right.


இரண்டாவது அட்டையில் எழுத வேண்டிய வாசகம்:Please arrange for announcing the total number of voters registered for 49 o in every constituencyat the end of the poll, as it is the right of every citizen to know this information.இதை அனுப்பவேண்டிய முகவரி: The Chief Election commissioner, Election commission of Inbdia, Nirvachan sadan Ashoka road, New Delhi 110 001.






Friday, April 3, 2009

G20 பகிர்வுகளும் அதிர்வுகளும்....

ஒரு வழியாக G20 சில மறைமுக அதிர்வுகளோடு முடிந்தது.... இதனுடைய குறிக்கோள் (aims) ஆவது...
  • பொருளாதார மந்த சுழ்நிலையில் பன்னாட்டு வணிகத்தை நிலைபெற செய்வது (stabilility international Business)
  • பொருளாதார வளர்ச்சிக்கான மீள் கருவிகள்
  • பொருளாதார வளர்ச்சியை தக்கவைப்பது...

கொடுமை என்னவெனில், செய்தியாளர் சந்திப்பில் மன்மோகன் சிங் சில முரண்பாடுகளை வெளிப்படுத்தினார்...வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகள் மீது இந்த சுமையை திணிக்க கூடாதாம் 500 billion காண IMF இன் நிதயுதவியில் கொஞ்சம் பங்கு இந்தியாவுக்கு வேண்டுமாம். G20 நாடுகள் 200% ஆக Asian development bank இன் நிதிவுதவியை அதிகரிக்க வேண்டுமாம்..

சந்தை பொருளாதரத்தை ஏற்றுக்கொண்ட மற்றும் இந்தியாவுக்கு பரவலாக்கின மன்மோகன் அதனால் வரும் சுமையை எதிர்நோக்க மாட்டார்... என் எண்ணம் என்னவெனில் இந்தியாவுக்கு கட்டுப்பாடு உள்ள சந்தை பொருளாதாரம் அதாவது தாரளமாக்குதலில் சில கட்டுப்பாடுகள் வேண்டும்.. நல்லதாய் சோஷலிச பாரம்பரியம் மிக்கதாய் உள்ளதால் நாம் பெரிய இடர்களை சந்திக்கவில்லை... 10 வருடத்துக்கு முன்பு தென் அமெரிக்கா நாடுகள் சந்தித்த இந்த உலகமயமாக்கல் பாதிப்பை நாம் மறக்கலாகாது....

Doha பேச்சுவார்த்தைக்கும் G20 இக்கும் சிறு நூல் இழை வித்யாசம்... அடைவது நாங்கள் என்ன வேணும் ஆனாலும் செய்வோம் ஆனால் வளரும் நாடுகள் தங்கள் மானியங்கள் மற்றும் பிறவற்றை கட்டுபாட்டுடன் செலுத்தவேண்டும்...

G20 என்பது வளர்ந்த நாடுகள் தங்களை சுற்றி ஒரு மக்கள் புரட்சி நடைபெறாமல் ஒரு பாதுகாப்பு வலயமாக இந்த சந்திப்பினை மாற்றிக்கொண்டு உள்ளன...

Friday, March 20, 2009

தேர்தலும் வாழ்வாதார பிரச்சனைகளும்...

தேர்தல் வந்தால் எல்லா அரசியல் கட்சிகளும் என்ன இலவசங்களை கொடுக்கலாம், தொகுதி பங்கீடு பேரம், தேர்தல் நிதி, உச்சகட்ட அரசியல் அறிக்கைகள் என நேரமே இல்லாமல் இருப்பார்கள்...
நமது எதிர்பார்ப்பு என்னவெனில்....அவர்களின் குறைந்த பட்ச அறிகையில் கீழ் கண்ட திட்டங்கள் இருக்க ஒரு நப்பாசை....
நீண்ட கால திட்டங்கள்


  • நதிகள் பங்கீடு, நதிகள் இணைப்பு , மணல் கொள்ளை மற்றும் நீராதாரம் போன்றவற்றுக்கான தொலைநோக்கு திட்டங்கள் ...
  • ஆரம்ப கல்வி, சரிவிகித உணவு, செயல் வழி கற்றல் மற்றும் நகர / கிராம கல்வி முரண்பாடுகளை களைதல்...
  • பொதுவிநியோக திட்டம், இயற்கை வேளாண்மை, சிறு/குறு விவசாயிகளுக்கான கடன், வேளாண்மையில் நவீன தொழில்நுட்பத்தின் பங்கு..
  • மரபு சாரா எரிசக்தி கொகைகள், மரபு அணு மாற்று உணவு கட்டுப்பாடு
  • சிறு கடன் (micro-credit) கொள்கைகள்

குறுகிய கால திட்டங்கள்:

  • இந்த பொருளாதார மந்த பிரச்சினையை எதிர்கொள்ள

- மூன்று ஆண்டுக்கான மொத்த உள் நாட்டு உற்பத்தி அளவுகோல்

- அமைப்பு சாரா தொழில் / தொழிலளர்கள் கொள்கைகள்

-ஏற்றுமதி / இறக்குமதி கொள்கைகள்

-எரிபொருளுக்கான கொள்கைகள்

பார்ப்போம்....

நடந்தாய் வாழி காவேரி...

வணக்கம் நண்பர்களே .....
இந்த பதிவு எனது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள...