Pages

Friday, April 3, 2009

G20 பகிர்வுகளும் அதிர்வுகளும்....

ஒரு வழியாக G20 சில மறைமுக அதிர்வுகளோடு முடிந்தது.... இதனுடைய குறிக்கோள் (aims) ஆவது...
  • பொருளாதார மந்த சுழ்நிலையில் பன்னாட்டு வணிகத்தை நிலைபெற செய்வது (stabilility international Business)
  • பொருளாதார வளர்ச்சிக்கான மீள் கருவிகள்
  • பொருளாதார வளர்ச்சியை தக்கவைப்பது...

கொடுமை என்னவெனில், செய்தியாளர் சந்திப்பில் மன்மோகன் சிங் சில முரண்பாடுகளை வெளிப்படுத்தினார்...வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகள் மீது இந்த சுமையை திணிக்க கூடாதாம் 500 billion காண IMF இன் நிதயுதவியில் கொஞ்சம் பங்கு இந்தியாவுக்கு வேண்டுமாம். G20 நாடுகள் 200% ஆக Asian development bank இன் நிதிவுதவியை அதிகரிக்க வேண்டுமாம்..

சந்தை பொருளாதரத்தை ஏற்றுக்கொண்ட மற்றும் இந்தியாவுக்கு பரவலாக்கின மன்மோகன் அதனால் வரும் சுமையை எதிர்நோக்க மாட்டார்... என் எண்ணம் என்னவெனில் இந்தியாவுக்கு கட்டுப்பாடு உள்ள சந்தை பொருளாதாரம் அதாவது தாரளமாக்குதலில் சில கட்டுப்பாடுகள் வேண்டும்.. நல்லதாய் சோஷலிச பாரம்பரியம் மிக்கதாய் உள்ளதால் நாம் பெரிய இடர்களை சந்திக்கவில்லை... 10 வருடத்துக்கு முன்பு தென் அமெரிக்கா நாடுகள் சந்தித்த இந்த உலகமயமாக்கல் பாதிப்பை நாம் மறக்கலாகாது....

Doha பேச்சுவார்த்தைக்கும் G20 இக்கும் சிறு நூல் இழை வித்யாசம்... அடைவது நாங்கள் என்ன வேணும் ஆனாலும் செய்வோம் ஆனால் வளரும் நாடுகள் தங்கள் மானியங்கள் மற்றும் பிறவற்றை கட்டுபாட்டுடன் செலுத்தவேண்டும்...

G20 என்பது வளர்ந்த நாடுகள் தங்களை சுற்றி ஒரு மக்கள் புரட்சி நடைபெறாமல் ஒரு பாதுகாப்பு வலயமாக இந்த சந்திப்பினை மாற்றிக்கொண்டு உள்ளன...

No comments:

Post a Comment