Pages

Sunday, May 24, 2009

ருசியா Vs அமெரிக்கா இலங்கை Vs இந்தியா


உணர்ச்சிவசப்பட்ட திரு. நாகர்ஜுனன் கட்டுரைக்கு ஒரு எதிர்வினை..

இலங்கை இன படு கொலை ஏன் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை வெகு சனங்களின் மீது காண முடியவில்லை? வெகு சனங்களில் நானும் ஒருவனாக ஒரு பதிவு...

communisim நீர்த்து போக செய்ய மற்றநாடுகளுக்கு பரவாமல் இருக்க அமெரிக்கா செய்த உக்தி ருசியாவை உடைக்க செய்தது... (ரஷ்ய தனக்கு தானையும் சில தவறுகள் செய்தது)

வெகுசனத்திடம் communisim பற்றி கேள்வி எழுப்புங்கள் .. அவர்களின் மறு கேள்வி ருச்சியா இருகிறதா? ரஷ்யாவின் நிலைமை என்ன? (தொழிலாளர்களை சுரண்டும் போது Karl Marx மறுபடியும் படிகப்படுவார் என்பது வேறு...) ...... இது அமெரிக்கா வெற்றி..

ராஜீவ் கொலைக்கு முன்:

இலங்கையை தன் கட்டுக்குள் வைத்திருக்க அமெரிக்கா தலிபானை வளர்த்ததை போல் விடுதலை புலிகளை இந்தியா வளர்த்தது... மற்ற நாடுகள் குறுக்கிடமால் இருக்க ஜெயவர்த்தனா ஒப்பந்தம் மூலம் 1800 இந்திய வீரர்களை பலிவாங்கி ஆயிரகணக்கான பலாத்காரம், கொலைகளை செய்து திரும்பியது... முடிவு உணர்ச்சிவசப்பட்ட விடுதலை புலிகளின் ராஜீவ் கொலை..
ராஜீவ் கொலைக்கு பின்..
இந்திய உதவி இல்லாமல் மிக வேகமாக வளரும் புலிகளால் இந்தியாவிற்கு அதிர்ச்சி. தனி ஈழம் அமைந்தால் இந்தியாவுக்கு ஆபத்து... அண்ணாவின் தனி தமிழ் நாடு கொள்கைகள் திரும்ப வரலாம்...
தமிழகத்தில் தமிழர்களின் உணர்வு மழுங்கடிக்க அடக்குமுறை அவசியம்.. அதற்கு பாசாங்கு உள்ள இந்திய ஜனநாயகம் இடம் அளிக்கா.. இங்குதான் அமெரிக்காவும் இந்தியாவும் ஒரே கோட்டில் அயலுறவு கொள்கையில் இணைக்கிறது. நேரடியாகவும் மறைமுகமாகவும் இலங்கைக்கு உதவிகள்... முடிவு இந்த இன படுகொலையுடன் நடந்து முடியபோகிறது...

வெகு சனங்களின் மனநிலை:

  • சரியான தலைமை இல்லாமை.. (அ) தலைமைகளின் சந்தர்பவாதம்
  • ஊடகங்கள் சரியாக எடுத்து செல்லாதது
  • படிததவர்கள் போராட்டத்தில் இறங்குவதில்லை.. பாமரர்கள் இலவச தொலைக்காட்சியின் அருகில் குத்தாட்டங்களில் மயங்கி இருப்பது..

போன்ற சராசரி காரணங்கள்....

நான் இன படுகொலையை ஆதரிக்கவில்லை.. இது இரண்டாம் உலக போருக்கு பின் நடந்த மிக பெரிய படு கொலை.

இந்த உணர்ச்சிவசப்பட்ட இந்த கட்டுரை too late...

உங்களை போல் அனுபவம் உள்ள அறிவுஜீவிகளிடம் நாங்கள் எதிர்பார்ப்பது : இனி என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கான விடை..

Friday, May 22, 2009

உழவுக்கு முதலில் வந்தனை...


"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்" - பாரதியார்

இந்தியாவில் உழவு வேறு தொழில் வேறு, ஆனால் அமெரிக்காவில் எல்லாமே தொழில்கள்...
இந்தியாவில் agriculture (உழவு ஒரு கலாச்சார வாழ்வாதார முறை) அமெரிக்காவிலோ Agro Industry (விவசாயம் ஒரு தொழில்). 1950 களில் ரஷ்யவிலுருந்து கடன் வாங்கிய ஐந்தாண்டு திட்டங்களை போல் நேருவால் கூட்டு பண்ணைகளை அமைக்க முடியவில்லை ஆதலால் உழவு ஒரு கலாச்சார, சுயமரியாதை சின்னமாக விளங்கியது. இன்று ருசியா போய் அமெரிக்கா...
1970 இல் வந்த பஞ்சத்தினால் விவசாய புரட்சி - ரசாயன உரங்கள், பூச்சி கொல்லி மருந்துகள், கலப்பின விதைகள் இல்லாமல் நம்மால் இன்று விவசாயம் செய்ய முடியாது (சில விலக்குகள்) மரபணு மாற்றபெற்ற (Genetically Modified) உணவுகளை நாம் உண்ணுகிறோம்... அதாவது விஷத்தை உண்ணுகிறோம்... கலப்பின விதைகளின் அரசன் / அரக்கன் எல்லாமே இந்த நவீன GM முறை தான்.
GM பற்றிய ஒரு விழிபுணர்வு நம்மிடம் இல்லை... மேலை நாடுகள் நம்மை ஒரு பரிசோதனை கூடமாக மற்றயுள்ளன, இதை பற்றி நம் அரசியல்வாதிகளுக்கு பிரச்சினை இல்லை (சில கோடிகள் பிச்சைபோட்டால் போதும்)
சிலந்தி, வெட்டுகிளி, பாம்பு, தவளை மற்றும் இன்னும் பிற உயிரினங்களிளுருந்து எடுக்க பட்ட மரபணுக்களை நெல் கோதுமை விதைகளில் செலுத்தி இந்தியாவில் பரிசோதிக்கபடுகிறது. அமெரிக்கா மற்றும் ஈரோப்பிய நாடுகளில் GM உணவுகளின் மீது மரபணு மற்றம் செய்யப்பட்ட என்கின்றன வரிகள் இருக்கும் ஆனால் இங்கு?????????

Wednesday, May 20, 2009

டார்வினும் பரிணாமமும்...

சுமார் நான்கரை கோடி வருடத்துக்கு முன்பு வாழ்ந்த ஓர் உயிரினத்தின் படிமன் (fossil) கண்டுபிடிக்கபட்டுள்ளது...


அறிவியலாளர்கள் இத்தனை விடுபட்ட தொடர்பு (missing Link) என அழைக்கிறார்கள்.. அதாவது மனிதனுக்கும் பாலூட்டி விலங்குகளுக்கும் உள்ள தொடர்புக்கு விடை காண நல்ல ஆதாரமே இந்த படிமம்...

டார்வின் கொள்கைகள் (அவரது orgin of the Species என்ற புத்தகத்திலிருந்து) பலரால் மறுக்கப்பட்டு (முக்கியமாக மத அடிப்படை வாதிகள்) பலரால் ஏற்றுக்கொள்ளபட்டு, உறுதியான எல்லோராலும் (மதவாதிகளை தவிர) ஏற்றுக்கொள்ளபடும் தத்துவமாக இன்னும் மாறவில்லை...


ஏன் டார்வின் கொள்கைகளுக்கு முக்கியத்துவம்?
  • DNA பற்றிய சிக்கலான கேள்விகளுக்கு விடை காண...
  • எப்படி உயிர்கள் தோன்றின..
  • உரங்கள் இல்லாமல் பயிரிட...

இப்படி பல இத்யாதிகள் (சுஜாதா உயரோடு இருந்தால் ஒரு பெரிய கட்டுரையை எழுதி இருப்பார்)...