Thursday, April 16, 2009
Friday, April 10, 2009
49-O
- உங்கள் ஒட்டு கள்ள ஓட்டாக மாறாமல் இருக்கும்...
- இது போன்ற 49-ஒ அதிர்ச்சிகள் - அரசியல்வாதிகளை ஓரளவுக்காவது திருந்த செய்யும்...
- சமுதாயத்தை திருத்த இது ஒரு எளிதான வழி...
பல்வேறு காரணத்தினால் உங்களால் ஒட்டு சாவடி பக்கம் போக முடியவில்லை எனில்... ஞானியின் குமுதம் ஒ பக்க கட்டுரையை படியுங்கள் (http://www.gnani.net/index.php?option=com_content&task=view&id=90&Itemid=9)
அந்த கட்டுரையில் உள்ளது போல் ஒரு தபால் அட்டையை எடுத்து 49-ஒ வாக்கு இயந்திரத்தில் சேர்க்க உச்ச நீதி மன்றத்திற்கு...
கீழ் வரும் ஆங்கில வாசகத்தை எழுதி கையெழுத்திட்டு உங்கள் பெயர் முகவரியையும் குறிப்பிட்டு அனுப்புங்கள்:we request you to expedite judgement on the case pending for several years now, seeking installation of a button for 49 oin voting machines to ensure secrecy of voting, our fundamental right.
இரண்டாவது அட்டையில் எழுத வேண்டிய வாசகம்:Please arrange for announcing the total number of voters registered for 49 o in every constituencyat the end of the poll, as it is the right of every citizen to know this information.இதை அனுப்பவேண்டிய முகவரி: The Chief Election commissioner, Election commission of Inbdia, Nirvachan sadan Ashoka road, New Delhi 110 001.
Friday, April 3, 2009
G20 பகிர்வுகளும் அதிர்வுகளும்....
- பொருளாதார மந்த சுழ்நிலையில் பன்னாட்டு வணிகத்தை நிலைபெற செய்வது (stabilility international Business)
- பொருளாதார வளர்ச்சிக்கான மீள் கருவிகள்
- பொருளாதார வளர்ச்சியை தக்கவைப்பது...
கொடுமை என்னவெனில், செய்தியாளர் சந்திப்பில் மன்மோகன் சிங் சில முரண்பாடுகளை வெளிப்படுத்தினார்...வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகள் மீது இந்த சுமையை திணிக்க கூடாதாம் 500 billion காண IMF இன் நிதயுதவியில் கொஞ்சம் பங்கு இந்தியாவுக்கு வேண்டுமாம். G20 நாடுகள் 200% ஆக Asian development bank இன் நிதிவுதவியை அதிகரிக்க வேண்டுமாம்..
சந்தை பொருளாதரத்தை ஏற்றுக்கொண்ட மற்றும் இந்தியாவுக்கு பரவலாக்கின மன்மோகன் அதனால் வரும் சுமையை எதிர்நோக்க மாட்டார்... என் எண்ணம் என்னவெனில் இந்தியாவுக்கு கட்டுப்பாடு உள்ள சந்தை பொருளாதாரம் அதாவது தாரளமாக்குதலில் சில கட்டுப்பாடுகள் வேண்டும்.. நல்லதாய் சோஷலிச பாரம்பரியம் மிக்கதாய் உள்ளதால் நாம் பெரிய இடர்களை சந்திக்கவில்லை... 10 வருடத்துக்கு முன்பு தென் அமெரிக்கா நாடுகள் சந்தித்த இந்த உலகமயமாக்கல் பாதிப்பை நாம் மறக்கலாகாது....
Doha பேச்சுவார்த்தைக்கும் G20 இக்கும் சிறு நூல் இழை வித்யாசம்... அடைவது நாங்கள் என்ன வேணும் ஆனாலும் செய்வோம் ஆனால் வளரும் நாடுகள் தங்கள் மானியங்கள் மற்றும் பிறவற்றை கட்டுபாட்டுடன் செலுத்தவேண்டும்...
G20 என்பது வளர்ந்த நாடுகள் தங்களை சுற்றி ஒரு மக்கள் புரட்சி நடைபெறாமல் ஒரு பாதுகாப்பு வலயமாக இந்த சந்திப்பினை மாற்றிக்கொண்டு உள்ளன...