Pages

Saturday, December 12, 2009

இன்று போய் நாளை வா




சிவாஜி கணேசன் பற்றி நிறைய எழுதி நிறைய படித்து நமக்கு அலுத்து போய்விட்டது.

இன்னும் கடவுள் சிவ பெருமானை நினைக்கும் போது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உருவமே வருகிறது. நேற்று சம்பூர்ண ராமாயணம் படத்தில் (கமலின் படம் அல்ல.. இது என் டி ராமராவ் படம்) ராமன் தம்பி பரதனாக வருவார் ஆனால் அவருக்கு அந்த charater சரிவரவில்லை... மெகா சீரியலில் வரும் அழு மூஞ்சி கஞ்சியாகஉள்ளது .. பேசாமல் ராவணனாக நடித்திருந்தால் பேஷாக இருந்திருக்கும்... வீணை இசையை சிதம்பரம் ஜெயராமனுக்கு பதிலாக சிவாஜி பாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்...



சரி என்ன விஷயம் எனில்.... இன்று அதிகாலை எனக்கு ஒரு பயங்கர கனவு... சாரு நிவேதிதா ராவணனாகவும், ஜெயமோகன் தலைமை அமைச்சர் மகோதகன் ஆகவும் இசைஞானி இளையராஜா வீணை கொடியுடைய வேந்தன் என பாடிக்கொண்டு இருக்கிறார் ராவண சபையில்.. இங்கு நான் பதிவது இலக்கிய pulp அல்லது pipmஒ இல்லை.. சரி இது ராமாயணம் ஆயிற்றா, ராமன் எங்கே என பார்த்தால், அவர் வாணர (திராவிட கழகத்தினர் மன்னிப்பாராக) சேனையுடன் வருகிறார் அதற்குள் தூக்கம் களைந்து விடுகிறது...


அடுத்த கனவில் ராமனாக ஜெயமோகன் ராவணனாக சாரு: இராவணன் புத்தக வெளியீடு விழாவில் பிசியாக இருக்க ராமன் அம்பு எய்த அன்றைய போர் முடிகிறது.. இராவணன் சொல்கிறான் " இன்று போய் நாளை வா " (தலைகீழ் ராமாயணம்)


இந்த அதி பயங்கர கனவுக்கு யாரும் பின்னூட்டம் இட்டு விளக்கலாம், தக்க சன்மானம் வழங்கப்படும்...


(பின்குறிப்பு: நாங்கெல்லாம் விடிய விடிய ராமயணம் கேட்போம்ல)....